Saturday, April 25, 2009

கவிதை என்பது...

கையெனும் எழுத்தாளன் மனமெனும் கவிஞனிடம் திருடியது ...

You still mistook him... Doshi

When he gave the final over to kamran khan, it wasn't about believing in some one else. In my view, it was Gayle who forced him do that. He (warne) is one of the smartest cricketer, i have seen. Pace was the need of the hour. See what happened when mendis bowled.

Tuesday, April 14, 2009

சித்திரை திருநாளாம் ...

அவனியெங்கும் விழாகோலம் பூண...
நாடெங்கும் தோரணங்கள் தொங்க...
மக்கள் மனதில் இன்பம் வைகையாய் பெருக்கெடுக்க...
"புத்தாண்டு பட்டை" உடுத்தி புது பொலிவுடன் புறப்பட்டாள் தமிழ் தாய்...
இடையில் நின்றான் ... வழி மறித்தான்... மூத்த மகன்..
தமிழ் வீட்டின் "தற்சமய" தலைவன்... கருணா மைந்தன்...
பழுத்த குரலில் பறை அறைந்தான் ...
"பொங்கலுக்கு தான் புத்தாண்டு பட்டு,...
இன்று சித்திரை கண்டாங்கி போதும் !!" என்று ...
மனம் உடைந்தாள்... கதவடைத்தாள்...
காத்திருந்தாள் ... தை பிறக்க ....










Wednesday, April 01, 2009

கனவுகள் பலவிதம் ... அதில் ஒன்று...

கண்ணோடு கண் நோக்க அவளை கண்டேன்
இதழோடு இதழ் உரச முத்தமிட்டேன்
உடலோடு உடல் மோத சத்தமில்லாமல் யுத்தம் செய்தேன்
மயங்கினேன் விழித்தெழுந்தேன்...
எனை ஈன்றவள் கொடுத்த உதையால் !!! ...



என்றும் வாடாத கவிதை மலர்கள்...

Some of my Old Poems...

Publishing it in my blog now...


நிலவின் ஓளி....என்னை சுட்டெரித்தது....
தென்றலும் என் உடலை கிழித்தது...
அவளின் மௌனத்தால்
இறுதியில் கலைந்தது அவளின் மௌனம்
என் கல்லறை தூக்கத்திற்கு துக்கம் தெரிவித்து....

will post some more when time permits.